இந்தியா

முதல்வர், துணை முதல்வர் அடுத்தவாரம் டெல்லி பயணம்?

முதல்வர், துணை முதல்வர் அடுத்தவாரம் டெல்லி பயணம்?

sharpana

முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அடுத்த வாரம் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தை திறந்துவைக்க அவர்கள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த அலுவலத்தை திறந்துவைக்கக்கூடும் எனத் தெரிகிறது. அவர்களுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரும் டெல்லி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவது, சசிகலா தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருப்பது போன்ற காரணங்களால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், ஈ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் டெல்லி செல்லவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லியில் அவர்கள் இருவரும் தலைவர்கள் யாரையாவது சந்திக்க உள்ளார்களா? என்பது தெரியவில்லை.

அடுத்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் டெல்லிக்கு செல்வார்கள் என தகவல்கள் சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வரக்கூடிய சூழலில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அடுத்தவாரம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அதிமுக சார்பில் கட்டப்பட்டு வரும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்துவைக்க இருவரும் டெல்லிக்கு புறப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை கடந்த முறை டெல்லியில் நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியின் சாகேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.

அலுவலகப் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில் அதனை திறந்துவைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது இதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் டெல்லி சென்று கட்டிடத்தை திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள டெல்லி பயணம் படுவார்கள் என சொல்லப்படுகிறது. மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லியில் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது