இந்தியா

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் செளகான் மறைந்தார்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் செளகான் மறைந்தார்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

webteam

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் சேத்தன் செளகான், உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73. 1969 முதல் 1981 ஆம் ஆண்டு வரையில் 40 டெஸ்ட்  மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"சேத்தன் செளகான் ஒரு அற்பதமான கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, விடாமுயற்சியின் மூலம் அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். பொதுப்பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பலப்படுத்தினார். அவரது மறைவு வருத்தம் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் " என்றும் பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராகவும் உத்தரப்பிரதேச அரசில் அமைச்சராகவும் பதவிவகித்துள்ள செளகான், கொரோனா தொற்று காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 12 அன்று அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உறுப்பு செயலிழப்புகள் காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.