இந்தியா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலயாவுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலயாவுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

Veeramani

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலாயவிற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

செப்டம்பர் 16ல் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றவும் கொலீஜியம் பரிந்துரைத்திருக்கிறது.

இதேபோல விஜய கம்லேஷ் தஹில்ரமானி மேகலாயாவிற்கு மாற்றப்பட்டபோது, அதை ஏற்க மறுத்துவிட்டு பதவியை 2019 ஆகஸ்டில் ராஜினாமா செய்துவிட்டு சென்றார். தஹில் ரமாணியை மாற்றிய போது பல தரப்பிலும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டாலும், கொலீஜியம் முடிவை திரும்பப்பெற மறுத்துவிட்டது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி 2020 ஜனவரி 4ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.