தெலங்கானா மாநிலம் கம்மத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சந்திரசேகர் ராவ் பேசினார். அப்போது அவர், “பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே தெலங்கானா மாநிலம் உருவாக போராட்டம் நடத்தவில்லை. அதன் வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை.
பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சிக் காலத்தில்தான் தெலங்கானா பெரும் வளர்ச்சியை சந்தித்தது. எனது உயிர் உள்ளவரை தெலங்கானா மதசார்பற்ற கொள்கை அடிப்படையிலான மாநிலமாகவே நீடிக்கும். இந்தியாவில் இனி மாநில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும்” என தெரிவித்தார்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.