இந்தியா

விடுமுறை விட்டால் நடவடிக்கை

விடுமுறை விட்டால் நடவடிக்கை

Rasus

பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை விடப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடப்படும் விடுமுறை காரணமாக பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படும் என அறிவித்திருந்தனர்.