ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்களை மறுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்காக பதிவு செய்யவும், ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்கவும் அனைத்து மாநிலங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. ரேஷன் அட்டை தொகுப்பில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமென்றால், சம்மந்தப்பட்டவரிடம் விசாரணை நடத்தி அவர் பயனாளி இல்லை என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக ரேஷன் பயனாளிகள் யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.