இந்தியா

ராணுவ வீரர்களுக்கான தொலைபேசி கட்டணம் ரத்து

ராணுவ வீரர்களுக்கான தொலைபேசி கட்டணம் ரத்து

webteam

எல்லையில் நாட்டை காக்கும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதற்கான திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 
தீபாவளி பரிசாக இந்த திட்டத்தை அறிவித்த மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா, இதன் மூலம் வீரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த 500 ரூபாய் மாதாந்திர தொலைபேசி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். அத்துடன் இதுவரை நிமிடத்துக்கு 5 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த பயன்பாட்டு கட்டணமும் ஒரு ரூபாயாக குறைக்கப்படும் என்றும் கூறினார். இந்த புதிய திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.