இந்தியா

வராக் கடன்களுக்கு தள்ளுபடி.. விவசாயக் கடன்களுக்கு இல்லையா? : சீதாராம் யெச்சூரி

வராக் கடன்களுக்கு தள்ளுபடி.. விவசாயக் கடன்களுக்கு இல்லையா? : சீதாராம் யெச்சூரி

webteam

பெரு நிறுவனங்களின் வராக் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏன் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, அதிகப்படியான வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 15 நாட்களுக்கும் அதிகமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலங்க‌ளவையில் தமிழக விவசாயிகள் பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது பேசிய அவர், பெரு நிறுவனங்களின் வராக் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு ஏன் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

இதேபோல் மாநிலங்களவையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி ராஜா, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் முற்றிலும் அழிந்துவிடும் என ‌மக்கள் அஞ்சுவதை சுட்டிக்காட்டி பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்‌பன் திட்டத்தை செயல்‌படு‌த்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தை அவர் மாநிலங்களவையில்‌ எழுப்பினார்.