பெட்ரோல் நிலையங்களில் ஜெனரிக் மருந்தகங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் ‘ஜன் அவுஷதி’ என்ற பெயரில் ஜெனரிக் மருந்துகள் அரசால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த மருந்தகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லாததால், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை வாங்க முடியும்.
மேலும், வருகிற 2019 முதல் சி.எஃப்.எல். பல்புகள், எல்இடி பல்புகள், எல்.இ.டி. டியூப்லைட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பெட்ரோல் பங்குகள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.