இந்தியா

மத்திய அரசின் 'நிறுத்திவைப்பு' யோசனையை பரிசீலிக்கும் விவசாய அமைப்புகள்!

மத்திய அரசின் 'நிறுத்திவைப்பு' யோசனையை பரிசீலிக்கும் விவசாய அமைப்புகள்!

Rasus

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கிறோம், அதுவரை போராட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்ற என்ற மத்திய அரசின் யோசனையை விவசாய அமைப்புகள் பரிசீலித்து வருகின்றனர்.

வேளாண் சட்ட விவகாரத்தில் வரும் 22ஆம் தேதி பேச்சுவார்த்தை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கூறி டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 2 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது. இவ்விவகாரத்தில் அரசுக்கும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் 10ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க அரசு முன் வந்ததாகவும், அதுவரை போராட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்ற யோசனையை தாங்கள் ஏற்கவில்லை என்றும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தினர். எனினும், இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க அரசு முன்வந்ததாகவும், இது குறித்து பரிசீலித்து தெரிவிப்பதாகவும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, டெல்லியில் பஞ்சாப் விவசாயி கோல்டன் அளித்த பேட்டியில், "நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் இருந்தே மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற இயலாது. தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலையை உறுதி செய்கிறோம் என தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு தேவையானது மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வட்டங்களையும் திரும்பப் பெறுவது மட்டுமே.

அதேநேரத்தில் டிராக்டர் பேரணியை நடத்தக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு கெடாமல் அமைதியான முறையில் டெல்லியில்தான் எங்களுடைய டிராக்டர் பேரணி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.

டெல்லியின் எல்லைகளில் எங்களுடைய டிராக்டர் பேரணியை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லிக்குள் பேரணியை நடத்தி எங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்துவது தான் எங்களுடைய நோக்கம். உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது" என்றார்.