இந்தியா

கொரோனா பரவலுக்கு இடையே ரயிலை ஓட்டிய பெண் ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்

கொரோனா பரவலுக்கு இடையே ரயிலை ஓட்டிய பெண் ஊழியர் : குவியும் பாராட்டுக்கள்

webteam

மும்பையில் கொரோனாவிற்கு மத்தியிலும் ரயில் ஓட்டிய பெண் ஊழியரை மத்திய ரயில்வேத்துறை பாராட்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. குறிப்பாகத் தலைநகர் மும்பை கொரோனாவால் இயல்பு நிலையை இழந்ததுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு இடையே பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்காக நகர்ப்புற ரயில் இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று பெண் ஊழியர் மனிஷா மாஸ்கே கோர்பாட், நகர்ப்புற ரயிலை இயக்கினார். அவர் கண்ணாடியால் ஆன முகக்கவசத்தை அணிந்திருந்தார். அதற்குள் துணியால் ஆன முகக்கவசத்தை அணிந்திருந்தார். கொரோனா அச்சத்திற்கு இடையிலும் ரயிலை இயக்கியதற்காக மனிஷாவை பாராட்டியுள்ள மத்திய ரயில்வே, அவர் முறையாக முகக்கவசம் அணிந்திருப்பதை வெகுவாக பாராட்டியிருக்கிறது.

மேலும், ரயிலில் செல்லும் பயணிகள் அனைவரும் இதேபோன்று உரியப் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் எனவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் மனிஷாவை பாராட்டி வருகின்றனர்.