இந்தியா

கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன?- மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன?- மத்திய அரசு விளக்கம்

webteam

கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

மக்களவையில் திமுக எம்பி ஞானதிரவியம், கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகின்றன என கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்  பதிலளித்தார்.

அதில், கூடங்குளம் அணுக்கழிவுகள் பாதுகாப்பான இடத்திலேயே புதைக்கப்படுகின்றன. தரையில் இருந்து 15மீ ஆழத்தில் அணுக்கழிவுகள் தரமான முறையில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்பு காரணம் கருதி எந்த இடம் என்பதை கூற முடியாது. கூடங்குளம் அணுக்கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.