வயநாடு நிலச்சரிவு கோப்புப்படம்
இந்தியா

“வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” - மத்திய அரசு

வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி, காங்கிரஸ் முன்னால் மக்களவை உறுப்பினரான கே.வி.தாமஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய அரசு.

Jayashree A

கேரள மாநிலத்தின் பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயம், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் மண்ணில் புதையுண்டர். அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி மண்ணில் புதையுண்ட சிலரை காப்பாற்றி இருந்தாலும், இதில் 251 பேர் உயிரிழந்தனர் 47 பேரைக் காணவில்லை. மீட்பு படையினர் பல நாட்களாக இப்பகுதிகளில் மீட்புப் பணியினை மேற்கொண்டு வந்தனர்

வயநாடு நிலச்சரிவு

வீடுகளும் உடமைகளும் மண்ணில் புதைந்தது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தால் வயநாடே உருக்குலைந்தது. இது நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மக்களும் தனியார் தொண்டு நிறுவனமும் உதவி செய்து வந்தது.

இந்நிலையில் வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி, காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினரான கே.வி.தாமஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வயநாடு

இவரது கடிதத்திற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய், “முண்டக்கை சூரல்மலை நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” என்று அறிவித்துள்ளது.