வி.கே.சிங் - விமானங்கள் புதிய தலைமுறை
இந்தியா

ஓராண்டில் மட்டும் 406 விமானங்களில் கோளாறு.. மத்திய அரசு தகவல்!

கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களில் ஏற்பட்ட கோளாறுகளின் எண்ணிக்கை 406 என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Prakash J

குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் விமானக் கோளாறுகளின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “2023ல் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா, ஆகாசா ஏர், ஏர் ஏசியா மற்றும் புளு டார்ட் உள்ளிட்ட 10 விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் 406-ல் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் 233-ல் தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டது. மேலும் விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக முதியவர்கள் அல்லது குழந்தைகள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தான எந்த ஒரு தரவுகளையும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பராமரிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.