ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் மணம் புரிந்த மகளிருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளியான செய்தி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976ஆம் ஆண்டின் சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தின் பிரிவு 5 தெளிவாக கூறுகிறது.
இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல், நிர்வகித்தலுக்கு மாநில அரசிடமே அதிகாரம் உள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை விரிவாக அறிக்கை அளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபால் உண்மைநிலை அறிக்கையை அளிக்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தையும் கேட்டுள்ளது.