இந்தியா

‘மார்ச் 31 வரை பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்களை மூடுங்கள்’: மத்திய அரசு அறிவுறுத்தல்

‘மார்ச் 31 வரை பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்களை மூடுங்கள்’: மத்திய அரசு அறிவுறுத்தல்

webteam

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்கள் போன்றவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மத்திய அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்:

பள்ளிகள், நீச்சல் குளங்கள், மால்கள் போன்றவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட அறிவுறுத்தல்

பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்

பொதுப் போக்குவரத்தை குறைவாக பயன்படுத்த வேண்டும்

தனி நபர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

அத்துடன், “இந்தியாவில் தற்போது வரை 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதித்த 13 பேர் நோய் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர்” என்று கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.