இந்தியா

ஜன் அவுஷாதி யோஜனா திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டம்?

webteam

ஜன் அவுஷாதி யோஜனா திட்டத் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.                   
மத்திய அரசு ஜன் அவுஷாதி யோஜனா திட்டத்திற்கு மீண்டும் புத்துணர்வு கொடுக்கும் வண்ணம் செயல்பட தொடங்கி உள்ளது.  சென்ற ஆண்டு உலகின் மிக பெரிய சுகாதார காப்பிட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ பொருட்களை குறைந்த விலையில் கொடுப்பது இதன் ஒரு அங்கமாகும். இதனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் தொடங்கப்பட்ட ஜன் அவுஷாதி திட்டத்தை மத்திய அரசு தற்போது  மறுசீரமைப்பு செய்ய உள்ளது. 

அதன்படி ஜன் அவுஷாதி யோஜனாவில் பொதுவான மருந்து பொருட்கள் மற்றும் கருத்தரிப்பு சோதனைக் கருவி, குழந்தைகள் மற்றும் பெண்களின் டயபர்கள், நிக்கோட்டின் மாற்று மாத்திரைகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்கள் ஜன் அவுஷாதி மையங்களில் வெளிசந்தையைவிட 50 சதவிகிதம் குறைந்த விலையில் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் ஜன் அவுஷாதி மையங்கள் மூலம் அரசின் கருத்தரிப்பு சோதனைக் கருவி "அன்குர்"  20 ரூபாய்க்கு கிடைக்கும். இதை போல பல மருந்துப் பொருட்களின் விலையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக் கூடும்.

ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு தொடங்க பட்ட இந்தத் திட்டத்தை 2015இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சீர்படுத்தி 4600  ஜன் அவுஷாதி மையங்களை அமைத்திருந்தது. இதன் முலம் ஜன் அவுஷாதி மையங்கள் நல்ல தரமான மருந்து பொருட்கள் வழங்க ஆரம்பித்தன. 

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் வர இருப்பதால் மத்திய அரசு ஆயுஷ்மான் பரத் திட்டத்தை முன்னிறுத்த முற்படுவதால் இந்த ஜன் அவுஷாதி திட்டத்திற்கு முன்னுரிமை தரவுள்ளது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் "ஜன் அவுஷாதி தினம்"  கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  ஆனால் இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.