இந்தியா

டிவி, ஏசி பொருட்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை

டிவி, ஏசி பொருட்களுக்கான வரியை குறைக்க கோரிக்கை

webteam

எல்இடி டிவிக்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்ற‌ வீட்டு உபயோக பொருட்களுக்கான வரியை குறைக்க மத்திய அரசிட‌ம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் வரும் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பல்வேறு துறையினரும் தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளை நிதியமைச்சகத்திடம் முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பாளர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதில் பெரிய திரை டிவிக்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதமாக குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. த‌ற்போதைய நிலையில் ‌32 அங்குலத்திற்கு மேற்பட்ட திரை அள‌வுள்ள டிவிக்களுக்கு 28% வரியும், 32 அங்குலத்திற்கு கீழ் உள்ள டிவிக்களுக்கு 18% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. 

தங்கள் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பானசோ‌னிக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மணீஷ் சர்மா, டிவி, குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகிய பொருட்கள் தற்போது அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ளதாக கூறினார். எனவே அவற்றை அதிக வரி பிரிவில் வை‌த்திருப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார். டி‌விக்களுக்கான வரியை குறைப்பதால் அவற்றின் விற்பனை அதிகரித்து அரசின் வருமானம் அதிகரிக்கும் என சோனி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் நய்யார் தெரிவித்தார்.