இந்தியா

"வாட்ஸ் அப் உளவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு"- காங்கிரஸ் குற்றச்சாட்டு

jagadeesh

செல்போன் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சில அமைப்புகள் உளவு பார்க்கும் மென்பொருளை உருவாக்கி அதை உலவ விட்டு தகவல்களை உளவு பார்த்து வருவதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்தார். தனி நபர் தகவல் பாதுகாப்பு ஒவ்வொருவரின் உரிமையாக உள்ள நிலையில் அதை மீறும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.