ஆதார் அடையாள அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஏற்கனவே மத்திய அரசு இரண்டு முறை நீடித்த நிலையில், தற்போது பொதுமக்களின் வசதிக்காக மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ள ஆதார் அமைப்பு பயனாளர்களுக்கு கால அவகாசம் வழங்கும்.
அந்தவகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகளை ஆதார் அமைப்பு செய்துள்ளது. ஆதார் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய பயனாளர்கள் அதற்கான இணையதளம் அல்லது ஆதார் மையங்களுக்கு சென்று சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காலக்கெடு நிறைவடைந்த பிறகு அப்டேட் செய்யப்படாத ஆதார் அடையாள அட்டை ரத்து செய்யப்படமாட்டாது எனவும் ஆதார் அமைப்பு கூறியுள்ளது.