இந்தியா

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

கலிலுல்லா

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 10 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. அதேபோல அதிகளவிலான கடனிலும் மூழ்கியிருந்த காரணத்தால் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சி அரசு இறங்கியது. 60000 கோடி ரூபாய் கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது. ஏர் இந்தியாவின் மொத்த அதிகாரத்தையும் தனியாருக்குக் கொடுக்கவும், கடன் நிலுவையில் பெரும் பகுதி அரசு ஏற்றுக்கொள்ள முடிவு செய்து ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் குழுமம் முன்வந்தது. இந்த ஏலத்திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.