இந்தியா

கொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்

கொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. - மத்திய அரசு விளக்கம்

webteam

கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் சிலர் கொரோனா குறித்து கிண்டல் செய்து மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இதைனைத்தொடர்ந்து கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை என வதந்தி பரவியது. இந்நிலையில், கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.