இந்தியா

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க போதிய நிதி இல்லை - மத்திய அரசு

webteam

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது

ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மத்திய அரசு 1.51 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு தர வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 ஆயிரத்து 700 கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு தர வேண்டியுள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் "ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காலங்களில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது அவசியம் என சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் முதல் ஜூலை வரை ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருப்பதால் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க போதிய நிதி தற்போது இல்லை" என தெரிவித்துள்ளது.