நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ வெங்காயம் 55 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விநியோகத்தை அதிகரிக்கவும் விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும் மத்திய அரசின் அனுமதியின் பேரில் மற்ற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்தின் விலை அதிகரித்த போது வெங்காய ஏற்றுமதிக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு 40 விழுக்காடு வரி விதித்திருந்தது.