இந்தியா

“அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்” - மத்திய அரசு

“அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்” - மத்திய அரசு

EllusamyKarthik

அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக வெளியான அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வட்டத்தில் நடைபெறும் தேர்வில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு, சு.வெங்கடேசனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி மத்திய அரசுக்கு வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதத்தில் மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக  மத்திய பணிகளில் தமிழுக்கு உரிய  இடத்தை உறுதி செய்ய தனது முயற்சிகள் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் என்றும் முன் நிற்கும் எனவும் அவர் கூறினார்.