இந்தியா

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி: வரைவு கொள்கை வகுப்பு

webteam

ஆசிட் வீச்சு, ஆட்டிஸம், மனநலக் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவுக் கொள்கையை, மத்திய பணியாளர் நலத்துறை வகுத்துள்ளது. 

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிட் வீச்சு, ஆட்டிஸம், மனநலக் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் மாற்றுத் திறனாளிகளாக வரையறுத்து, அரசுப் பணிகளில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதை நடைமுறையில் உறுதி செய்யும் விதமாக, மத்திய பணியாளர் நலத்துறை வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது. இதன் மீதான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.