இந்தியா

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

webteam

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வரைவுக் கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 6 ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடம் நடத்த புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து விவரிக்க உள்ளனர்.