இந்தியா

“மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளன”- தன்பால் ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி

“மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளன”- தன்பால் ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி

Rasus

தன்பால் ஈர்ப்பு குற்றமல்ல என்ற உச்சநீதிமன்‌ற தீர்ப்பை நாடெங்கிலும் உள்ள எல்.ஜி.பி.டி குடும்பத்தினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.

தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. தன்பாலின ஈர்ப்பை குற்றம் என அறிவிக்கும் சட்டப்பிரிவு 377க்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இத்தனை ஆண்டுகளாக சுமத்தப்பட்ட களங்கத்திற்கு நமது சமூகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று நாடெங்கிலும் உள்ள தன்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவர்கள், ஆடல் பாடலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள லலித் ஹோட்டலில் தன்பால் ஈர்ப்பாளர்கள், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும் உற்சாகமாக நடனமாடி‌னர். பல்வேறு நகரங்களிலும் கூடிய  இவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்தத் தீர்ப்பு மூலம் தங்‌களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.