மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இத்தகவலை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் தவிர்க்க முடியாத நிலையில் பதவியிலிருந்து விலக விரும்புவதாகவும் அரவிந்த் சுப்பிரமணியன் தம்மிடம் கூறியதாக ஜெட்லி தெரிவித்தார். அரவிந்த் சுப்பிரமணியனின் குடும்ப சூழல் கருதி அவரது ராஜினாமாவை ஏற்க நேர்ந்ததாகவும் ஜெட்லி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
அருண் ஜெட்லி தனது ஃபேஸ்புக்கில், “சில தினங்களுக்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் வீடியோ கான்ஃபிரன்சிங்கில் என்னை சந்தித்தார். குடும்ப விஷயங்களுக்காக திரும்பவும் அமெரிக்க செல்ல வேண்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அது அவரது சொந்த காரணம். முக்கியமான குடும்பன விவகாரம் காரணமாக, எந்த மாற்றும் இல்லாத நிலையில் அவர் சென்றுவிட்டார். சூழல் கருதி அவரது ராஜினாவை ஏற்றுக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அரவிந்த் சுப்பிரமணியன் சிறப்பான பங்களித்தார் எனவும் ஜெட்லி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த 2014ம் ஆண்டு நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டே முடிந்த நிலையில் அதே பதவியில் சிறிது காலம் தொடருமாறு அரசு கேட்டுக்கொண்டிருந்தது. தற்போதையை பதவிக்காலம் முடிவடைய 4 மாதங்கள் உள்ள நிலையில், அரவிந்த் சுப்ரமணியன் முன் கூட்டியே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.