இந்தியா

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Rasus

சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வசூலித்து அதை திரும்பத் தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதாக கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சாரதா குழும நிறுவனங்களில் இருந்த மக்கள் பணத்தை அதன் நிர்வாகிகள் முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில் நளினி சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாக கூறி வழக்குப் பதியப்பட்டுள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாளர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் சாரதா சிட்பண்ட் நிர்வாகத்திடம் இருந்து நளினி சிதம்பரம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை சட்டவிரோதமாக பெற்றதாகவும் சிபிஐ தன் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.