இந்தியா

மும்பையில் சிபிஐயின் கேள்விக்கு மவுனம் சாதிக்கும் கார்த்தி சிதம்பரம்

மும்பையில் சிபிஐயின் கேள்விக்கு மவுனம் சாதிக்கும் கார்த்தி சிதம்பரம்

Rasus

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வாக்குமூலம் அளித்த இந்திராணி முகர்ஜி, மும்பை சிறையில் இருக்கிறார். அவருக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்புகள், பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கத் திட்டமிட்ட சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த மும்பைக்கு கார்த்தி சிதம்பரத்தை அழைத்துச் சென்றுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு கார்த்தி சிதம்பரத்தை அழைத்துச் சென்ற அதிகாரிகள், இந்திராணி முகர்ஜி முன்னிலையில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சிபிஐயின் பல கேள்விகளுக்கு பதில் கூறாமல் கார்த்தி சிதம்பரம் மவுனம் சாதிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.