இந்தியா

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை விற்பனை செய்த 2 பேர் கைது!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை விற்பனை செய்த 2 பேர் கைது!

Veeramani

சமூக வலைத்தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்த இருவரை சிபிஐ கைது செய்தது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் சிறார்களின் ஆபாசப்படங்களை விற்பனை செய்ததாகவும், வாங்கியதாகவும் கூறப்படும் வழக்கில் டெல்லியில் நீரஜ் குமார் யாதவ் மற்றும் குல்ஜீத் சிங் மாகன் ஆகிய இருவரை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்தனர்.

பொறியாளரான நீரஜ் யாதவ் மீது போக்ஸோ , 2012 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது சிபிஐ. இவர் சிறுவர் ஆபாச தகவல்கள் உள்ளிட்ட ஆட்சேபகரமானவற்றை விற்பனை செய்வதற்கான இன்ஸ்டாகிராம் கணக்கினை வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நீரஜ் யாதவ், மற்றொரு நபரிடமிருந்து, அதிகளவிலான சிறார்களின் ஆபாசப்படங்களை வலைத்தளங்களில் சேமித்து வைத்துள்ளார். மேலும் சிறுவர் ஆபாசப்படங்கள் உட்பட ஆட்சேபகரமான விஷயங்களை பரப்பியுள்ளார், அதற்காக பேடிஎம் மூலம் அவருக்கு பணம் செலுத்தியதாகவும், இதற்கான விளம்பரத்தை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது”என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர் சி ஜோஷி கூறினார்.