இந்தியா

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..!

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..!

Rasus

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவிக்க உள்ளதாக புதிய தலைமுறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த வாரம் கூடியபோது மழைப்பொழிவு நிலவரம், தற்போதைய நீர் இருப்பு, காவிரியில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு போன்ற விவரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் மசூத் ஹூசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான தண்ணீரை கர்நாடகா எவ்வித தாமதமும் இல்லாமல் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தவிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். எனவே, அந்த நீரை திறந்து விட வலுவாக வலியுறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கும், தமிழக அரசு முதல்முறையாக எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது.