தேசிய குற்ற ஆவணக்காப்பகம் முகநூல்
இந்தியா

இந்தியாவில் கடந்த ஓராண்டில் அதிகரித்த பாலியல் வன்கொடுமை, கடத்தல் வழக்குகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த ஓராண்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

PT WEB

இந்தியாவில் கடந்த ஓராண்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஓராண்டில் குற்ற வழக்குகள் பதிவாவது 0.56% குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது. எனினும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 1.1 சதவீதமும், கடத்தல் வழக்குகள் 5.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2012ஆம் ஆண்டில் டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதற்கானதண்டனைகள் கடுமையாக்கப்பட்ட போதும் அவ்வகை குற்றங்கள் குறையவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2012இல் ஆண்டுக்கு 25,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவானதாகவும் 2022இல் இது 31,000 பெருகிவிட்டதாகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது. இடையே கொரோனா காலகட்டத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை சற்றே குறைந்ததாக குற்ற ஆவணக்காப்பக அறிக்கை கூறுகிறது.