மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முகநூல்
இந்தியா

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார்| நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு

Prakash J

தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்மூலம் தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், அதனை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன், மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி, நிதி வழங்கியவர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் மத்திய விசாரணை குழுவான அமலாக்கத்துறையை வைத்து தொழில் அதிபர்களை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஜனஅதிகார சங்கர்ஷ சங்கதனே (ஜேஎஸ்பி) ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு திலக் நகர் போலீசில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க: ஹிஸ்புல்லா தலைவர் மரணம்... யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? இஸ்ரேலை வீழ்த்த தயாராகும் அடுத்த தலைவர்.. ?

பெங்களூருவில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், நிர்மலா சீதாராமன் மட்டுமின்றி பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாஜக கர்நாடக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் மற்றும் கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

நிர்மலா சீதாராமன்

முன்னதாக, இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேபி நட்டா, நளின் குமார் கட்டீல், விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வங்கதேச ரசிகர்மீது தாக்குதல்?| ராபி இந்தியாவுக்கு வந்தது ஏன்? போலீஸ் விசாரணையில் முக்கியத் தகவல்!