இந்தியா

கோவா: சாகசத்துக்கு ஆசைப்பட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட நபர்!

கோவா: சாகசத்துக்கு ஆசைப்பட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட நபர்!

Sinekadhara

கோவாவில் கடலுக்கு காரை ஓட்டிச்சென்று சாதனை படைக்கலாம் என்று நினைத்த சுற்றுலாப்பயணியின் எண்ணம் சோதனையாய் முடிந்த சோகம் அரங்கேறியுள்ளது.

டெல்லியிலுள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்தவர் லலித் குமார் தயால். இவர் கோவாவிற்கு சுற்றுவா சென்றுள்ளார். அங்கு உள்ளூர் குடியிருப்பு வாசியிடம் கார் வாடகைக்கு எடுத்த லலித், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பிரபல பீச்சான அஞ்சுனா பீச்சிற்கு சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு ஒரு அற்புத யோசனை தோன்றியிருக்கிறது. தண்ணீருக்குள் காரை ஓட்டிசென்றால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் போலும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடலை நோக்கி சென்ற காரின் டயர் மணலுக்கு சிக்கிக்கொண்டது. அப்படித்தான் அவர் போலீசிலும் சிக்கிக்கொண்டார்.

லலித்தின் கட்டுப்பாட்டில் தாறுமாறாக சென்ற காரை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுவிட்டனர். காரும் மணலில் சிக்கி அங்கேயே நின்றிருக்கிறது. தகவலறிந்த போலீசார் சாகச சம்பவ இடத்திற்குச் சென்று அவரை அழைத்துச்சென்று சிறையில் உட்காரவைத்து விட்டனர். அவர்மீது இந்திய சட்டப்பிரிவுகளான 279 (பொது வழியில் அவசரமாக வாகனம் ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல்) மற்றும் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் தனது தனிப்பட்ட சொந்த காரை வாடகைக்கு கொடுத்த குற்றத்திற்காக வட கோவாவின் மாபுசா டவுணைச் சேர்ந்த காரின் உரிமையாளர் சங்கீதா கவாதல்கர் என்பவர்மீது புகார் அளித்துள்ளனர்.