வெப்ப கருவி புதிய தலைமுறை
இந்தியா

டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் பதிவானதாக வெளியான தகவல் குறித்து வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்

Jayashree A

தலைநகர் டெல்லியில் அதிகரித்த வெப்பம்... 52.3 செல்ஸியஸ் பதிவு.

எந்த வருடமும் இல்லாமல் இந்தவருடம் அனேக இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூரியபுயல். சூரியபுயல் பூமியை தாக்கியதால், கடந்த வாரம், துருவ ஒளியானது வானத்தில் தெரிந்தது. இதைப்பற்றி ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.

இந்த சூரியபுயலால் வரலாறு காணாத அளவு இந்தியாவில் வெப்பமானது அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் மே மாதம் அக்னி நட்சத்திரமாதம், இந்த மாதத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து இருக்கும், அத்துடன் சூரிய புயலும் வீசி வருவதால் வழக்கத்தைவிட வெப்பநிலையானது அதிகரித்து காணப்படுகிறது.

இருப்பினும் கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் சற்றே ஆறுதல் தரும் வகையில் மழை பெய்து வெப்பத்தை தணித்திருந்தாலும், கடந்த சில தினங்களாக மீண்டும் வெப்பநிலையானது உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது முங்கேஷ்பூர் பகுதியில் பதிவானதாக தகவல் வெளியானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. டெல்லியின் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே சிறு தூறலுடன் சாரல் மழையும் பெய்துள்ளது.

இருப்பினும் தற்போதைய தகவலின்படி சென்சார் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிக வெப்பம் பதிவாகியிருக்கலாம் என்றும் சென்சார் கருவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.