இந்தியா

கொரோனா 3ஆம் அலை அச்சத்தை புறந்தள்ளிவிட்டு பள்ளிகளை திறக்க உத்தரவிடமுடியாது: உச்சநீதிமன்றம்

கொரோனா 3ஆம் அலை அச்சத்தை புறந்தள்ளிவிட்டு பள்ளிகளை திறக்க உத்தரவிடமுடியாது: உச்சநீதிமன்றம்

Veeramani

கொரோனா மூன்றாவது அலை அச்சத்தை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகளில் வகுப்புகளை தொடங்க உத்தரவிடக்கோரி 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்வாக விவகாரங்களில் முடிவெடுப்பதை அரசிடம் விட்டுவிடவேண்டும் எனக் கூறிய நீதிமன்றம், அரசியல் தீர்வுகள் தேடுவதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி வழக்கு தொடர்ந்த டெல்லியைச் சேர்ந்த மாணவனுக்கு அறிவுறுத்தியது.

நாடு இரண்டாவது கொரோனா அலையிலிருந்து தற்போதுதான் மீண்டிருக்கிறது என குறிப்பிட்ட நீதிபதிகள், மற்றொரு அலைக்கான சாத்தியக்கூறு உள்ள நிலையில் பள்ளிகளை திறக்க உத்தரவிடமுடியாது எனக் கூறினர்.