upsc x page
இந்தியா

மத்திய அரசுப் பணிகள்| நேரடி நியமன நடைமுறை ரத்து.. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Prakash J

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இடஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், ”அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுநர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் உருவானது” என்று பாஜக சுட்டிக்காட்டி விளக்கமளித்தது. எனினும், தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார். ”சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம்” என பிரதமர் கூறியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 39 ரன்கள்! 17 ஆண்டுகால யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. ருத்ரதாண்டவம் ஆடிய சமோயா அணி வீரர்!