வி.கே. பாண்டியன் - அமித் ஷா ஃபேஸ்புக்
இந்தியா

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? - உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா என பிஜு ஜனதா தள மூத்த தலைவர் வி.கே. பாண்டியனைக் குறிப்பிட்டு அந்த மாநில தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

தேர்தலை முன்னிட்டு சம்பல்பூரில் நடந்த பரப்புரையில் அமித் ஷா பங்கேற்றுப் பேசினார். சட்டமன்றத் தேர்தல் ஒடிசாவின் பெருமைக்கானது என்றும் ஒடிசாவின் கலாசாரத்தையும், சுயமரியாதையையும் நவீன் பட்நாயக் நெரித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் இது குறித்து குற்றஞ்சாட்டிய அவர், பிஜு ஜனதா தள ஆட்சியில் ஒடிசா 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. 25 லட்சம் மக்களுக்கு தற்போதும் வீடு, குடிநீர் வசதி இல்லை. ஒடிசாவை தமிழ் மொழி பேசுபவர் ஆளவேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆளவேண்டுமா?.” என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.