இந்தியா

மனித உருவத்துடன் கன்றுக் குட்டி!

மனித உருவத்துடன் கன்றுக் குட்டி!

webteam

உத்தரபிரதேசத்தில் மனிதர்களின் தோற்றத்துடன் கன்று ஒன்று பிறந்து இறந்துள்ளது. அதனை அம்மாநில மக்கள் கடவுளின் அவதாரம் என வணங்கி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் பசு மாடு ஒன்று கன்று போட்டுள்ளது. அந்த கன்றுக்குட்டியின் முகம், கண், மூக்கு, காது ஆகியவை மனிதர்களை போலவே இருந்துள்ளது. கன்றுக்குட்டி கடந்த வியாழக்கிழமை பிறந்தது. பின் ஒரு மணி நேரத்திற்குள் இறந்துவிட்டது. வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்தக் கன்றை கண்ணாடி பெட்டியில் வைத்து கடவுளின் அவதாரம் என அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். அதற்கு கோவில் கட்டவும் முடிவு செய்துள்ளனர். இது விஷ்ணுவின் அவதாரம் எனக் கூறி பலர் மாலையுடன் வந்து கன்றிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். மூன்று நாட்களில் கன்றுக்குட்டியை தகனம் செய்ய உள்ளனர். 

கால்நடை மருத்துவரான அஜய் தேஷ்முக் கூறுகையில், உடற்கூறியல் முரண்பாட்டால் கன்றுக்குட்டி இப்படி பிறந்துள்ளது. மரபணுவில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இப்படி குறைபாடுகளுடன் விலங்குகள் பிறக்கும் என தெரிவித்துள்ளார்.