இந்தியா

நாங்கள் என்ன செய்ய முடியும்.... இது கடவுளின் செயல்

நாங்கள் என்ன செய்ய முடியும்.... இது கடவுளின் செயல்

webteam

காஷ்மீரில் கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலியான சம்பவம் கடவுளின் செயல் என்று தெரிவித்த அதிகாரிகள், தாங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர். 

காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கேபிள் கார் பல அடி உயரத்திலிருந்து அறுந்து விழுந்தது. இதில் பயணம் செய்த 7பேர் பரிதாபமாக பலியானார்கள். உலகின் 2வது உயரமான கேபிள் கார் சேவை என்று பெயரைப் பெற்ற இங்கு நிகழ்ந்த விபத்தால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து டிவிட்டரில் கருத்தை பதிவு செய்த அவர், பலத்த காற்று வீசும்போது கேபிள் கார் சேவையை நிறுத்தி வைப்பதுதான் வழக்கம் என்றும், விதி மீறப்பட்டதாலே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பான பணியிலிருந்த அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்ட உயரதிகாரிகள், பணியின்போது அனைத்து விதிமுறைகளும் சரியாக பின்பற்றியதாகவும்,  இதனை மீறியும் விபத்து ஏற்பட்டது என்றால், அது கடவுளின் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.