நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மோடியை அடுத்து ராஜ்நாத் சிங், அமித்ஷா,நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பதவியேற்றனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் பல்வேறு புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இன்று பொறுப்புகள் வழங்கப்பட்டன
- பிரதமர் மோடி - பணியாளர் துறை, ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைகேட்பு, அணுசக்தி, விண்வெளி
- ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை
- அமித்ஷா - உள்துறை
- நிதின் கட்கரி - சாலைபோக்குவரத்து , நெடுஞ்சாலை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்
- நிர்மலா சீதாராமன் - நிதியமைச்சர்
- சதானந்தா கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை
- ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை
- ராம்விலாஸ் பஷ்வான் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
- நரேந்திர சிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாய நலன் மற்றும் ஊரக மேம்பாடு
- ஸ்மிரிதி இரானி - மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
- ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- கர்ஷிம்ராட் கார் படால் - உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகம்
- தாவர் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
- முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம்
- பியூஸ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், தொழில் துறை
- ஹர்ஷ்வர்தன் - சுகாதாரத்துறை
- பிரகாஷ் ஜவடேகர் - மத்திய சுற்றுச்சூழல், தகவல் ஒலிபரப்பு
- அர்ஜூன் முண்டே - பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்
- ரமேஷ் போக்ரியால் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
- தர்மேந்திர பிரதான் - பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- பிரல்கேட் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கம்
- மகேந்திர நாத் பாண்டே - திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
- அரவிந்த கணபத் ஷவாந்த் - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள்
- கிரிராஜ் சிங் - கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை
- கஜேந்திர சிங் - ஜெல் சக்தி