நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, விமானி மீது விமானப் பணிப்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று, இண்டிகோ. குறைந்த கட்டணச் சேவையை செய்து வரும் இந் நிறுவனம் இந்தியா வின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. பெங்களூருவில் இருந்து அமிர்தரஸ், ஸ்ரீநகர் வழியாக டெல்லிக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல, கடந்த 16 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது.
நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பணிப்பெண்ணுக்கு விமானி பாலியல் தொல்லை கொடுத்துள் ளார். இதுபற்றி அந்த பணிப்பெண் டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், ’விமானி சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டதால், காக்பிட்டுக்கு கொண்டு சென்றேன். அப்போது மற்றொரு விமா னி, கழிவறைக்குச் சென்றுவிட்டார். தலைமை விமானி, கையில் செல்போனுடன் என்னை வரவேற்றார். அருகில் இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். அவர் செல்ஃபி எடுக்கலாம் என்றார். நான் மறுத்தேன். கழிவறை சென்ற விமானி வருவதற்குள், தலைமை விமானி பாலியல் ரீதியாக எனக்குத் தொல்லைக் கொடுத்தார்.
பின்னர் அமிர்தசரஸில் விமானம் நின்றதும் என் னிடம் ஃபோன் நம்பரை கேட்டார். தொடர்ந்து தொல்லைக் கொடுத்தார். அடுத்து டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் என்னைக் கட்டிப்பிடிக்க முயன்றார். இதுபற்றி சக விமானப் பணிபெண் களிடமும் இண்டிகோ நிறுவனத்திடமும் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.