மத்திய பட்ஜெட் - 2024-25 முகநூல்
இந்தியா

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் எப்போது? - வெளியான அறிவிப்பு

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், 3ஆவது முறையாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 23ஆம் தேதி மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசின் கோரிக்கைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கவனிக்கதக்கது.