இந்தியா

'விவசாயிகள் நலன்' - நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை... நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

'விவசாயிகள் நலன்' - நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை... நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

webteam

கொரோனா தொற்றின் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது மூன்றாவது பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.

2021-22 பட்ஜெட்டை முன்வைக்கும்போது, 2020-21 ஆம் ஆண்டில் கோதுமை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு ரூ.75,060 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து மக்களவையில் விவசாயிகள் நலனில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறும்போது, எதிர்கட்சிகளின் முழக்கங்களை எதிர்கொண்டார்.

"எங்கள் அரசாங்கம் விவசாயிகளின் நலனுக்காக உறுதிபூண்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை அனைத்து பொருட்களிலும் உற்பத்தி விலையை விட குறைந்தது 1.5 மடங்கு விலையை உறுதிப்படுத்தும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. குறைந்தபட்ச விற்பனை விலை (எம்.எஸ்.பி) நிலையான விலையில் தொடரும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் கோஷங்களை எழுப்பினர். நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது "சட்டங்களை திரும்ப பெறுக!" (Kaale kaanoon wapas lo)" என்ற அவர்களின் முழக்கம் அவையில் எதிரொலித்தது.

``அரசு விவசாயிகள் நலனின் அக்கறை கொண்டுள்ளது" என்ற மத்திய நிதியமைச்சரின் சொல்லாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதை மேற்கொள் காட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் #PetrolPriceHike என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல, பெட்ரோல் மீதான வேளாண் உட்கட்டமைப்பு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதற்காக Rs 2.5 என்ற ஹேஷ்டேக்கும், டீசல் மீதான வரி விதிக்கப்பட்டதற்கு Rs 4 என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது.

இது தவிர, Prasar Bharati, Cess, Middle Class, Railways, மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கை குறிப்பிடும் வகையில் Senior Citizens ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன.