பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி,என்.எல் ஆகிய நிறுவனங்களில் எதிர்பார்த்த அளவிற்கு தொழிலாளர்கள் விருப்ப ஓய்வை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தன. சுமார் ஒன்றரை லட்சம் பேர் பணிபுரியும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இதுவரை 77 ஆயிரம் தொழிலாளர்காள் விருப்ப ஓய்வு திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், எம்.டி.என்.எல் நிறுவனத்தில் இதுவரை 13 ஆயிரத்து 532 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க டிசம்பர் 3-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலான தொழிலாளர்கள் விருப்ப ஓய்வை தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.