இந்தியா

வீடியோ வெளியிட்ட வீரரை காணவில்லை: மனைவி அச்சம்

வீடியோ வெளியிட்ட வீரரை காணவில்லை: மனைவி அச்சம்

Rasus

எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் மீது ஊழல் புகார் சுமத்திய வீரரை ‌தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நாள்தோறும் 11 மணி நேரம் தொடர்ச்சியாக‌ பணிபுரியும் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை.. பல நாட்கள் வெறும் வயிற்றுடன் தூங்க வேண்டியுள்ளது என்று புகார் கூறி தேஜ் பகதூர் என்ற வீரர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பொதுமக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக, ஊடகங்களில் நேற்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பலமுறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள தேஜ் பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் குடிகாரர் என்றும் எல்லை பாதுகாப்புப் படை விளக்கம் அளித்தது. அதனை தேஜ் பகதூரின் குடும்பம் மறுத்துள்ளது.

தேஜ்பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறும் எல்லைப் பாதுகாப்புப் படை, அவரை எல்லையில் பணிபுரிய அனுப்பி வைத்தது ஏன்? என்று அவரது மனைவி ஷர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார். உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிப்படுத்திய தமது கணவரை நேற்று பிற்பகல் முதலே தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிய ஷர்மிளா, தேஜ்பகதூருக்கு நீதி கிடைக்க, இதுதொடர்பாக உரிய விசாரணை ‌நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.