இந்தியா

ஃபோட்டோ எடுப்பதற்கு போரா? - அடித்துக்கொண்ட உறவினர்கள்.. விசித்திரமான கல்யாண கலாட்டா!

ஃபோட்டோ எடுப்பதற்கு போரா? - அடித்துக்கொண்ட உறவினர்கள்.. விசித்திரமான கல்யாண கலாட்டா!

JananiGovindhan

வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று திருமணம். சந்தோஷமான இத்தகைய கல்யாண நிகழ்வுகளில் நடக்காத கலாட்டாக்களே இருக்காது. அதுவும் அண்மைக் காலமாக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக எக்கச்சக்கமான கல்யாண கலாட்டாக்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்ட சண்டையில் அந்த திருமணமே நிற்கும் அளவுக்கு களேபரமாகியிருக்கிறது. அதன்படி, கடந்த டிசம்பர் 8ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், யார் தரப்பில் முதலில் ஃபோட்டோ எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணம் தடைப்பட்டிருக்கிறது.

வரமாலை சடங்கு முடிந்ததும் நடந்த தீவிர வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்திருக்கிறது. அதில் மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என பிரச்னையை தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் கடுப்பான மற்றவர்கள் வாக்குவாதத்தை தொடங்க அது அடுத்தகணமே சண்டையாக மாறியதில் மணமகனின் அக்கா, மாமா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ராம்புர் கர்கானா போலீசார் மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அதேவேளையில் அடிபட்டவர்கள் சாதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இது குறித்து பேசியுள்ள மூத்த துணை காவல் ஆய்வாளர் பல்ராம் சிங், “ஃபோட்டோ ஏற்பட்ட தகராறு முற்றியதால்தான் இப்படியான சம்பவம் நடந்திருகிறது. நாங்கள் வருவதற்கு முன்பே எல்லோரும் மருத்துவமனைக்கு போய்விட்டார்கள்” என்றுக் கூறியிருக்கிறார்.

இதனிடையே நடந்த சண்டையால் மணமகன் கடுப்பானதால் தாலிக்கட்ட தயங்கியிருக்கிறார். ஆனால், ஒரு வழியாக திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.