சத்தீஸ்கர்  முகநூல்
இந்தியா

மகனை விட குறைவான வயது இளைஞரை கரம்பிடிக்க இந்தியா வந்த பிரேசில் பெண்.. விரைவில் டும்.. டும்.. டும்!

திருமணமாகி 31 வயது மகனுக்கு தாயான பெண் ஒருவர் தனது காதலனை சந்திப்பதற்காக பிரேசிலிலிருந்து சத்தீஸ்கர் வந்துள்ள சம்பவம் கேட்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

திருமணமாகி 31 வயது மகனுக்கு தாயான பெண் ஒருவர் தனது காதலனை சந்திப்பதற்காக பிரேசிலிலிருந்து சத்தீஸ்கர் வந்துள்ள சம்பவம் கேட்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை கரம்பிடிக்க எல்லை தாண்டி வந்த காதலி என்ற எத்தனை கதைகளையும் உண்மை சம்பவங்களையும் கேட்டிருப்போம், படித்திருப்போம்...அதேபோல, மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது..ஆனால்,எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகதான் இந்த சம்பவம் இருக்கிறது.

இதன்படி, 51 வயதான பெண் ரோஸி நயிட் ஹிகேரா, இவருக்கு திருமணமாகிய நிலையில் கணவர் மற்றும் 32 வயதில் மகனும் இருக்கிறார். இவர்கள் அனைவரும் பிரேசிலில் வசித்து வருகிறார்..

இந்தநிலையில்தான், ரோஸி கடந்த ஆண்டு கட்ச் பண்டிகை கொண்டாடுவதற்காக இந்தியாவின் சத்தீஸ்கருக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு செக்யூரிட்டியாக பணியாற்றி வந்த பவன் கோயலால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையில் நட்பு விரிவடைந்துள்ளது.. இந்த நட்பை சமூக ஊடகங்களின் உதவியுடன் தொடர்ந்து, காதலாக மாற்றியுள்ளனர் இவரும்..

இந்தநிலையில், பவன் மீது கொண்டிருந்த அளவு கடந்த காதலால்... தனக்கு திருமணமாகி 32 வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்பதையும் உதறி தள்ளிவிட்டு, தனது புதிய காதலனான பவனை தேடி இந்தியாவிற்கே செல்ல முடிவெடுத்து இந்தியாவும் வந்து சேர்ந்துள்ளார் ரோஸி.

இந்தநிலையில், தற்போது பவனின் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார் ரோஸி.. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கான அழைப்பிதழை உள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும் கொடுத்துள்ளனர்.. பவணுடனான திருமணத்திற்கு பிறகு, ரோஸி இந்தியாவிலேயே குடிபெயரவும் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பிட்டு கூறவேண்டுமேயானால், பவனுக்கு 30 வயது, ரோஸிக்கு 51 வயது.. அதாவது ரோஸியின் மகன் வயதை விட பவனுக்கு இரண்டு வயது குறைவு என்பதே கூடுதலான செய்தியாகும்.

மதம், வயது, மொழி, நாடு கடந்த இந்த காதல் கதையை கேட்போர் வியப்பில் உள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.